Saturday, May 1, 2010

வாருங்கள் இளைஞர்களே! தோழர்களே! ஒன்று சேருவோம்
இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்
உங்களுக்கு உழைக்க,
உங்களுக்கு கடமையாற்ற
உங்கள் ஆதரவை,
உலக தமிழ் மக்கள் சக்தி இயக்கத்திற்கு தாருங்கள்


தங்களைப் பற்றி சிந்திப்பவர்களை வீட்டிற்கு அனுப்புங்கள்,
உங்களைப் பற்றி சிந்திப்பவர்களை கோட்டைக்கு அனுப்புங்கள்,
என்றும் மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சி
உலக தமிழ் மக்கள் சக்தி இயக்கம்.....

Friday, April 30, 2010

உ.த. ம.ச.இ

கட்சி தம் பயணத்தை தொடங்குகிறது

இக்கட்சி தம் பயணத்தை தொடங்குகிறது
நமது வெற்றி நாளைய சரித்திரம், பல்வேறு உதவிகள்,நலத்திட்டங்களைஅறிவித்து ,செயல்படுத்தி மக்களின் ஒருமித்த ஆதரவை பெறவேண்டும்

அரசியல் என்பது ஒரு கடல். கடலில் கழிவுகள் கலந்துதான் இருக்கும். கழிவுகள் மட்டும்தான் கடலில் உள்ளது என சொல்வது மூடத்தனம். முத்தும் பவளமும் வைர மீன்களும் என பலவற்றையும் கொண்டு உலகை உயிர் பெறச்செய்யும் கடல் போல் நாட்டையும் சமுதாயத்தையும் உயிர் பெறச்செய்யும் அற்புத சக்தி அரசியலில் தான் இருக்கிறது. ஆனால் இன்றோ பல இளைய தலைமுறையினர் அதை பற்றி சிந்தனையற்று இருக்கின்றனர். எனக்கு வேண்டாம் என விலகுவது வேதனைக்குரியது. மக்களாட்சியில் ஒவ்வொரு வருக்கும் அரசில் பங்கு உள்ளது.

அரசியல் ஒரு சாகசப்பயணம்
அதனை மேற்கொள்ளுங்கள்
அரசியல் ஒரு சந்தர்ப்பம்
அதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
அரசியல் ஒரு போராட்டம்
அதனை எதிர்கொள்ளுங்கள்
அரசியல் ஒரு சவால்
அதனை சந்தியுங்கள்
அரசியல் ஒரு குழப்பம்
அதற்கு விடை காணுங்கள்
அரசியல் ஒரு இலக்கு
அதனை எட்டிப்பிடியுங்கள்
ஏழ்மையில் நேர்மை
கோபத்தில் பொறுமை
தோல்வியில் விடாமுயற்சி
துன்பத்தில் தைரியம்
செல்வத்தில் எளிமை
பதவியில் பணிவு !!